நேர்கொண்ட பார்வை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து எச்.வினோத் இயக்கும் படம் துணிவு. 2-வது முறையாக அஜித்தை இயக்கும் இப்படத்தில், மஞ்சு வாரியர், பக்வதி பெருமாள்,கவின் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படம், பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் துணிவு படத்தை அமெரிக்காவில் வெளிடும் உரிமையை சரிகம சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ஆர்ஆர்ஆர், கே.ஜி.எஃப், பொன்னியின் செல்வன் போன்ற படங்களை அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.