சென்னையில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நேற்று சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது.
தற்போது மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் 9 மணியில் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவிலேயே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.