வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல், நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரையை கடப்பதற்கு முன்பும், பின்பும், கனமழை பெய்ததால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில், வெள்ளம் தேங்கியுள்ளது.
இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் 9, 10 ஆகிய தேதிகளில், பார்மூலா 4 கார் ரேஸ், சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட இருந்தது.
வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருவதால், கார் ரேஸ் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், ஃபார்முலா 4 கார் ரோஸ் ஒத்திவைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற இருந்த இந்த ரேஸ், 3.5 கி.மீ சுற்றளவில், நடத்தப்பட இருந்தது என்பதும், இதற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.