கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, பெரும் பிரபலம் அடைந்த இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், கிரிக் பார்ட்டி படம் பற்றி பேசிய அவர், அந்த படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் இருந்தார்.
இந்த தவறான அனுகுமுறையால், கன்னட ரசிகர்களின் கோபத்தை ராஷ்மிகா பெற்றுள்ளார். இதன்காரணமாக, இவர் கன்னட சினிமாவில் நடிப்பதற்கு, தடை விதிக்கப்படலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.