Connect with us

Raj News Tamil

“கோ மூத்ரா மாநிலங்கள்” பாஜக வெற்றி: திமுக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

இந்தியா

“கோ மூத்ரா மாநிலங்கள்” பாஜக வெற்றி: திமுக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

திமுக எம்.பி. டி.என்.வி.செந்தில்குமார், மக்களவையில் பாஜக குறித்து பேசியது சர்ச்சையானது.

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியதாவது:

பசு கோமிய மாநிலங்கள் (`கோ மூத்ரா’ மாநிலங்கள்) என்று நாம் பொதுவாக அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுகிறது. இதுவே பாஜகவின் பலம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெறும் தேர்தலில் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது கோ மூத்திர மாநிலங்கள் என்று திமுக எம்.பி. செந்தில்குமார் பேசியிருப்பது சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. தற்போது, திமுக எம்.பி. செந்தில்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

More in இந்தியா

To Top