பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக் கொண்டு, தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யாவிற்கு, விவாகரத்து பெற்றுவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் உமைர் சந்து.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்து ஆகிவிட்டதாக, கூறியுள்ளார். இந்த தகவல், ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அபிஷேக் பச்சனின் கையில், அவரது திருமண மோதிரம் இல்லாததால், ரசிகர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.