லியோ படத்திற்கு பிறகு, வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில், விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், கூடிய விரைவில், 3-ஆம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே, இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்-க்கு தங்கையாக, நடிகை இவானா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, இந்த வாய்ப்பை நடிகை இவானா மறுத்துவிட்டதாக, தகவல் கசிந்துள்ளது.
அதாவது, தங்கை வேடத்தில் நடித்துவிட்டால், மார்கெட் குறைந்துவிடும் என்ற பயத்தில், இவானா இந்த முடிவு எடுத்திருப்பதாக, கூறப்படுகிறது.