மிக்ஜம் புயல் நிவாரண நிதியை ஒதுக்கியது மத்தியஅரசு..!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சென்னை வந்தார்.

வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக 5,060 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

Recent News