மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனால் ஏற்படும் கேள்விகள் சில பின்வறுமாறு…
- ஏன் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும்..?
ஒரே வளாகத்தின் அதிக மின் இணைப்புகளால், வாடகைதாரர்களிடம் அதிக மின் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். மின்சார செலவு விவரங்களை கணக்கீடு செய்வதற்கு.
- ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைக்காவிட்டால் என்னவாகும்..?
ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த இயலாது. மேலும் மானியம் பெரும் மின் நுகர்வோர் கட்டாயம் இணைக்கவேண்டும் என மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
- ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 100-யூனிட் மானியம் நின்றுவிடுமா..?
இதுபோன்ற அச்சம் தேவையில்லாத ஒன்று. கட்டாயம் 100-யூனிட் ரத்து செய்யப்படமாட்டது அமைச்சர் செந்தில் பாலாஜி திட்ட வட்டம்.
- யார் எல்லாம் கட்டாயம் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க வேண்டும்..?
விவசாயம், விசைத்தறி, குடிசைவீடு மின் நுகர்வோர்கள் இணைக்க வேண்டும்.
5.இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது..?
யாருடைய பெயரில் மின் இணைப்பு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ, அவரது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் பதிவேற்றம் செய்தால் போதுமானது.