கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ராகேஷ். இவர் 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இதனையடுத்து காதலியின் வீட்டிற்கு ராகேஷ் பெண் கேட்டு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் ராகேஷ் மீது தாக்குதல் நடத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராகேஷ், தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ராகேஷ் உயிரிழந்தார்.