டெல்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஒரு காலனியில் வசித்து வந்தவர் பிரேம் சிங் (54). இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் குடும்ப திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரேம் சிங் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த பிரேம் சிங், பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய சிறுமியின் தாயாரை சந்தித்து தன் மீதான புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரேம், அந்த சிறுமி மீது ஆசிட் வீசியுள்ளார். அதன் பின்னர் தானும் ஆசிட்டை குடித்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட சிறுமி தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். ஜாமீனில் வெளியே வந்த நபர், ஆசிட் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.