லியோ படத்திற்கு பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில், விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், மும்மரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது, இப்படத்தில், டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு, நடிகர் விஜய் இளமையாக காட்டப்பட இருக்கிறாராம். இந்த காட்சிகள் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் தான் வரும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த காட்சியை தத்ரூபமாக கொண்டு வருவதற்கு, ரூபாய் 6 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த தகவலை அறிந்த விஜயின் ரசிகர்கள், டீ ஏஜிங் லுக்கில், தளபதி விஜய் எப்படி இருப்பார் என்று ஆர்வம் அடைந்துள்ளனர்.