ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாகுவுக்கு சொந்தமான மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர். ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.290 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. பணத்தை எண்ணிக்கொண்டே இருந்ததால் எந்திரமும் கோளாறு அடைந்தது. இதனால், பணம் எண்ணும் பணிக்காக அதிக வருமான வரித்துறை அலுவலர்களும், வங்கி ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இதுவரை எண்ணிய பணத்தை வண்டி வண்டியாக வங்கிகளுக்கு கொண்டு சென்று அதிகாரிகள் பாதுகாத்தும் வருகின்றனர். இன்று 5-வது நாளாக இந்தப் பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.