கூகுள் நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிகமானோர் தேடிய ‘டாப் – 10’ தகவல்களின் பட்டியலை ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் கூகுள் இந்தியா நிறுவனம் 2023ம் ஆண்டுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் சந்திரயான் – 3 விண்கலம் முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் உள்ளது.
அதேபோல், உலக அளவில் கூகுளில் தேடிய தகவல்களில் காஸா போர் நிகழ்வுகள் முதலிடத்தை பிடித்தது. 2ம் இடத்தில் டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல் சம்பவமும், 3ம் இடத்தில் துருக்கி நிலநடுக்கமும் இடம் பெற்றுள்ளது.