‘ஐயோ எரியுதே.. எரியுதே..’ – பிறப்புறுப்பில் மிளகாய்.. கிராம மக்கள் தந்த தண்டனை!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே உள்ள ஜேவார் பகுதியில், ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை செய்திருப்பதாக, 2 இளைஞர்கள் மீது, அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, அந்த இரண்டு பேரையும் சுற்று வளைத்து பிடித்த அவர்கள், அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு மிகவும் கொடூரமான முறையில் தண்டனை ஒன்றையும் வழங்கியுள்ளனர்.

அதாவது, அந்த இரண்டு இளைஞர்களின் பிறப்புறுப்பில், மிளகாய் பொடியை தேய்த்து, சித்ரவதை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த இரண்டு இளைஞர்களையும் அங்கிருந்து மீட்டனர்.

இதையடுத்து, அந்த இரண்டு பேரும், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருடர்கள் என்று சந்தேகம் கொண்டதற்கே, பொதுமக்கள் இவ்வாறு கொடூரமான தண்டனை கொடுத்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News