வெளியான பாா்லிமென்டின் புதிய கட்டுப்பாடுகள்..! இதோ இங்கே..!

பாா்லிமென்டில் அவ்வப்போது பலவித விதிமுறை மாற்றங்கள் ஏற்படும்.ஆனால் , இன்று ஏற்பட்ட சில அசம்பாவிதங்களினால் தற்போது பாதுகாப்பு கருதி புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தள்ளது. 2001-ல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த அந்த சம்பவத்தின் நினைவு நாளான இன்று இத்தகைய சம்பவம் நடந்திருப்பது பலரையும் அதிா்ச்சியில் உரையவைத்துள்ளது.

அதாவது,3 மாதங்களே ஆன புதிய நாடாளுமன்றத்தில் இன்று , இரண்டு நபா்கள் பாா்வையாளா்கள் மன்றத்தில் இருந்து அவைக்குள் குதித்து வண்ணபுகைக்குப்பிகளை வீசியுள்ளனா்.இவ்வளவு பாதுகாப்பையும் தாண்டி இவா்கள் நுழைந்தது பலரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கூடுதல் பாதுகாப்பிற்காக பார்லிமென்ட் பாதுகாப்பு நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகள்
வெளிவந்துள்ளது.

அதில் கூறியுள்ளதாவது ,

  • இனி பார்லிமென்டின் பிரதான நுழைவு வாயிலில் இனி எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும் , எம்.பி.,களின் உதவியாளர்கள் யாரும்
  • பிரதான நுழைவு வாயிலில் வர அனுமதியில்லை,.
  • விமான நிலையங்களில் நுழைவு வாயிலில் விமான பயணிகளின் உடமைகளை சோதனையிடும் ஸ்கேன் மிஷின் போன்று பார்லிமென்ட் நுழைவு வாயிலில் பொருத்தப்படும்
  • பார்வையாளர்கள் மாடத்தில் கண்ணாடி தடுப்புகள் பொருத்தப்படும்.
  • பார்லிமென்ட் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் தனி பாதையில் வர வேண்டும்.
  • பார்வையாளர்கள் கால தாமதத்துடன் வந்தால் அவர்கள் அதற்கான தனி பாதை வழியாக வரவேண்டும்.
    மக்களை மாநிலங்களவையில் கூடுதலாக பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர் . என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது..
RELATED ARTICLES

Recent News