ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் 25 கிலோ குட்கா பறிமுதல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அஜிஸ் என்பவர் கல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவர் வெளிமாநிலத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதாக வந்த காவல்துறைக்கு ரகசிய தகவலின் பெயரில் குடியாத்தம் காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் சீவூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஜிஸ் வீட்டிலிருந்து சுமார் 25 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்தனர்.

பின்னர் தலைமறைவான ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஜிஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News