மாநகரம், கைதி, விக்ரம், லியோ என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக, நடிகர் ரஜினியை வைத்து, 171-வது திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இவரது பெயரை பயன்படுத்தி, பேஸ்புக்கில், புதிய கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கணக்கில், பல்வேறு ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் மட்டுமே கணக்கு வைத்துள்ளேன். மற்ற எந்த சோசியல் மீடியாவிலும் எனக்கு கணக்கு இல்லை. என் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள கணக்கை பின்தொடர வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து, நல்ல பெயரை பெற்றுள்ள லோகேஷ் கனகராஜின் இமேஜை கெடுப்பதற்கு தான், இதுமாதிரியான வேலைகளை சிலர் செய்து வருவதாக, கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.