மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன்யாதவ் போபாலில் உள்ள மோதிலால் நேரு மைதானத்தில் புதன்கிழமை பதவியேற்றார்.
இந்நிலையில் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை எடுத்தார். அதில், திறந்த வெளியில் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்தார். மேலும் உத்தரவை மீறி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அம்மாநில அரசாங்கம் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.