கச்சா எண்ணெய் கழிவை அகற்ற இன்று சென்னை வரும் வல்லுநர் குழு..!

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின் போது சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. இந்த எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து கடலில் கலந்ததால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கச்சா எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை, வரும், 17 ஆம் தேதிக்குள் முடித்து, 18ம் தேதி அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, கடலில் இருந்து எண்ணெய்யை அகற்ற சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் எண்ணெய் கழிவை அகற்றும் பணி தொடர்பாக ஒடிசா மாநிலத்தில் இருந்து வல்லுநர் குழு இன்று சென்னை எண்ணூருக்கு வருகை தர உள்ளனர். இது மட்டுமின்றி அதிநவீன இயந்திரங்களும், ஒடிசாவில் இருந்து வரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News