விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவர் வேலை செய்து வந்தார்.
வழக்கம் போல் இன்று காலை அவர் வெடி மருந்து கலக்கி கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளன. இந்த விபத்தில் சண்முகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.