சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கிடைத்த ரூ.154.77 கோடி வருவாயை விட குறைவு என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் வருகை குறைந்ததாலேயே, வருவாயும் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே தேதிக்குள் 18.88 லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில் இந்த ஆண்டு இது 18.16 லட்சமாக குறைந்துள்ளது.