சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது அரியலூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன் பக்க பெயர் திடீரென வெடித்தது. இதனால் பேருந்து தாறுமாறாக ஓடியது.
அடுத்த சில வினாடிகளில் பேருந்தின் பின்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்து பின்பக்க சக்கரங்கள் பேருந்தில் இருந்து தனியாக கழன்று விழுந்தது. பேருந்தில் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயந்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை சாதுர்யமாக நிறுத்தியுள்ளார். பின்னர் பேருந்தில் இருந்து பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொண்டலாம்பட்டி போலீசார் பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அவரவர் ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.