விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரக்கூடிய ஒரு டீக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வடை வாங்கி சாப்பிட முயன்ற போது அதில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் கடை உரிமையாளரிடம் கேட்டபோது அதை பெரிது படுத்தாமல் வாடிக்கையாளரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வடை ஒன்றில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தரமற்ற கடைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.