தென்மேற்கு வங்ககடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) சுழல் காற்றானது மணிக்கு 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக இன்று 2வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400 விசைப்படகு மீனவர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.