மஹாராஷ்ரா மாநிலத்தில் வெடி மருந்துகள் தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், வெடி விபத்து நடந்த போது எத்தனை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கூறினார்.