பா.பாண்டி படத்தின் மூலம், இயக்குநராக தனுஷ் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு, தனது 50-வது படத்தை, தற்போது அவர் இயக்கி வருகிறார்.
இந்த படத்தையும் முடித்த பிறகு, நெருங்கிய உறவினர் ஒருவரை ஹீரோவாக வைத்து, தனது 3-வது படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில், நடிகை அனிகா சுரேந்திரன் தான், ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். நடிகை அனிகா, அஜித்தின் விஸ்வாசம் மற்றும் என்னை அறிந்தால் ஆகிய படங்களில், அவருக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.