சினிமாவில் நடிப்பவர்கள் தான், பொதுவாக அரசியலுக்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது அரசியலில் உள்ளவர்களின் வாரிசுகள், சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டனர்.
இவ்வாறு இருக்க, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் பேரன் குணாநிதி, சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கும் இந்த படத்தில் தான், அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். குணாநிதி, ஏற்கனவே செல்பி படத்தை இணைந்து தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.