மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால், வெள்ளம் தேங்கி, சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனால், அப்போது பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது.
மேலும், வெள்ளம் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து, பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க, நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.