தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரயில் சேவைகள், விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை நெல்லை செல்கிறார். முதல்வர் மு.க. ஸ்டாலினின் உத்தரவின்பேரில் உதயநிதி நெல்லை செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.