பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட்டு, 2 மாதங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இருப்பினும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அந்த நிகழ்ச்சி சென்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, குறைவான வாக்குகள் பெற்று, சென்ற வாரம், ராபர்ட் மாஸ்டர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கும், ரக்ஷிதாவிற்கும் இடையே இருப்பது, வெறும் நட்பு மட்டும் தான். நான் அவரிடம் அந்த உறவு முறையில் தான் பழகினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு, அது தவறாக தெரிந்துள்ளது என்றும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.