ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான ஏலம் துபையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்கின்றன. இதில் 119 வெளிநாட்டு வீரர்களும், 214 இந்திய வீரர்களும் ஆவர். 10 அணிகளும் ஏலத்துக்காக சுமார் ரூ.262.95 கோடியை செலவழிக்க உள்ளன.
ஏலம் தொடங்கிய உடன் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவுலை 7 கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது.
பின்னர் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ரூ. 4 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது.