2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என அனைவரும் பெருமூச்சு விட்ட சூழலில் தற்போது மீண்டும் அந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது இது ஜேஎன் 1 வகை கொரோனா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில்மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்கு ஏற்கனவே இருவர் பலியான நிலையில், நேற்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில்மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது.