வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது திரைப்படத்தில், தற்போது விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷீட்டிங், புயல் வேகத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, இப்படத்தின் டைட்டில், வரும் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. மேலும், இப்படத்தின் டைட்டில், Boss அல்லது puzzle என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இது இரண்டுமே டைட்டில் இல்லை என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
இதனை அறிந்த ரசிகர்கள், தளபதி 68 படத்தின் டைட்டில் வேறு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.