விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் கமல் ஹாசன் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, எச்.வினோத், மணிரத்னம் என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இதுமட்டுமின்றி, ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். இதுமட்டுமின்றி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் கல்கி படத்திலும், வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், புதிய தகவல் ஒன்று, தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கல்கி முதல் பாகத்தில் நடிகர் கமல் நடித்து முடித்துவிட்டாராம். வெறும் 6 நாட்கள் மட்டுமே தான் முதல் பாகத்திற்கான ஷீட்டிங் நடந்திருக்கிறதாம்.
மேலும், இரண்டாம் பாகத்திற்கு இன்னும் 16 நாட்கள் ஷீட்டிங் இருக்கிறதாம். மொத்தமாக இந்த 22 நாட்களுக்கு மட்டும் அவர் 150 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். இந்த தகவல், பலரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.