திருப்பதி: பக்தர்கள் வருகை அதிகரிப்பு; நேற்று இரவே தொடங்கிய இலவச டோக்கன்!

வைகுண்ட ஏகாதசி நாளை (டிச.23) முதல் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வரை 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும் 10 நாட்களும் இலவச தரிசனம் மூலம் சுமார் 4,25,000 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் இந்த பத்து நாட்களும் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபடும் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. எனவே இலவச தரிசன டோக்கன்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆகி உள்ளிட்ட ஏதாவது ஒரு தரிசன அனுமதியுடன் திருப்பதி மலைக்கு வந்தால் மட்டுமே இந்த பத்து நாட்களும் ஏழுமலையான் வழிபட முடியும்.

(டிச.22) இன்று மதியம் 2 மணி முதல் திருப்பதியில் உள்ள 96 கவுண்டர்களிலும் 10 நாட்களுக்கும் ஆன இலவச தரிசன டோக்கன்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

ஆனால் வைகுண்ட ஏகாதசி தினம் அன்று சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய ஆவல் கொண்ட பல்லாயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் நேற்று மதிய முதல் இலவச டோக்கன் கவுண்டர்கள் முன் குவிந்து காத்திருக்க துவங்கினர்.

எனவே பக்தர்கள் எண்ணிக்கை மணிக்கு மணி அதிகரிக்க துவங்கியது.

இதன் காரணமாக விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதால் இன்று மதியம் இரண்டு மணி முதல் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்த தேவஸ்தான நிர்வாகம் (டிச.21) நேற்று இரவு 10 மணிக்கு இலவச தரிசன டோக்கன் வினியோகத்தை துவக்கியது.

டோக்கன் விநியோகத்தை முன்னிட்டு பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் போட்டி போட்டு ஓட்டமும் நடையுமாக சென்று ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து தரிசனம் டோக்கன்களை பெற்று சென்றனர்.

RELATED ARTICLES

Recent News