இரவில் பெட்ரோல் திருடும் இளைஞர்கள்: வைரலாகி வரும் சிசிடிவி காட்சி!

புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் அருகே சின்ன கொசப்பாளையம் பகுதி உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு தினம்தோறும் நள்ளிரவில் மர்ம நபர்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோல் திருடி செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் இரண்டு வாலிபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருட முயன்றுள்ளனர்.

அப்பொழுது அங்கு வந்த பெண்ணை பார்த்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் இந்த சிசிடிவி காட்சியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News