பாராளுமன்ற மக்களவையில் இருவர் புகுந்து வண்ண புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரிய பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக 146 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இதனை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் “ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராசா, சீத்தாரம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.