இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்கமுடியாது என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
இதையடுத்து பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.
புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என தனது X வலைத்தளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு பஜ்ரங் புனியாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.