No Means No.. அஜித்தே இருந்தாலும் இதுதான் என் முடிவு.. அதிரடி காட்டிய சாய் பல்லவி!

பிரேமம் என்ற மலையாள படத்தில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி. இந்த படத்திற்கு பிறகு, மாரி 2, கார்கி, என்.ஜி.கே என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் வாய்ப்பை தவறவிட்டிருக்கும் தகவல், தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அஜித்தின் துணிவு திரைப்படத்தில், மஞ்சு வாரியருக்கு பதிலாக, சாய் பல்லவி தான் முதன் முதலில் நடிக்க இருந்தாராம்.

ஆனால், அப்படத்தின் கதையை அவரிடம் சொன்னபோது, தன்னுடைய கதாபாத்திரம் வலுவில்லாமல் உள்ளது என்று கூறி, அவர் மறுத்துவிட்டாராம். இதேபோல், நடிகர் விஜயின் லியோ படத்தில், த்ரிஷாவுக்கு பதில், சாய் பல்லவி தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால், அந்த படத்தையும் அதே காரணத்தை சொல்லி அவர் மறுத்துவிட்டாராம். தனக்கு பிடிக்காத கதையில் யார் ஹீரோவாக நடித்தாலும், அதில் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி எடுத்திருக்கும் இந்த முடிவு, பலராலும் பாராட்டப்படுகிறது.

ஆனால், துணிவு, லியோ போன்ற வெற்றிப் படங்களின் வாய்ப்பையும் அவர் இழந்திருக்க வேண்டாம் என்றும், ஒரு சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News