ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கடந்த மாதம் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு சட்டமாக நிறைவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஆளுநரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விரைவில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். மேலும் அரசாணை தடைச்சட்டத்திற்கு அரசாணை வெளியிடவில்லை என்றார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், அரசாணை பிறப்பிக்காமால் அவசர சட்டம் இயற்றி என்ன பயன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆளும் அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தாமல் 8 உயிர்கள் பலியானதிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.