கிறிஸ்துமஸ் தினமான கடந்த 25ம் தேதி அன்று, சிறப்பு நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு சுற்றுப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று கிறிஸ்துமஸ் தினம் என்பதால் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தனர்.
மாணவ, மாணவிகள், பிரதமர் இல்லத்தில் உள்ள பல்வேறு அறைகள், ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம், அங்குள்ள கலை பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள், பொருட்களை ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தனர். பின்னர், அவர்கள் பிரதமருடன் மேஜையில் அமர்ந்தபடி மகிழ்ச்சியாக உரையாடினர்.
Curious young minds traversing across 7, LKM clearly made for a great experience. Seems my office passed the ultimate test – they gave it a thumbs up! pic.twitter.com/Eampc8jlHq
— Narendra Modi (@narendramodi) December 27, 2023
பிரதமர் இல்லத்தை சுற்றிப் பார்த்த அனுபவம் குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், மாணவா்கள் பலா் தங்களின் மகிழ்ச்சியான , அனுபவம் நிறைந்த கருத்துகளை கூறினா். இது குறித்த வீடியோவை பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும், அவா் குறிப்பிட்டுள்ளதாவது, “7, எல்.கே.எம் (பிரதமர் இல்ல முகவரி) இல்லத்துக்கு வந்த ஆர்வமுள்ள இளம் மாணவர்கள் சிறந்த அனுபவத்தை வழங்கினர். எனது அலுவலகம் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிகிறது. அதன் அடையாளமாக அவர்கள் கட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர்” என பதிவிட்டுள்ளார்.இதுகுறித்த பிரதமரின் இப்பதிவிற்கு பலரும் தங்களது ஆச்சரியம் நிறைந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.