விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி!

நடிகரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார்.

கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் விஜயகாந்த் மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News