நடிகர் விஜயகாந்துக்கு நீரிழிவு நோய், தைராய்டு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்டவை இருந்துள்ளது. நீரிழிவு நோயினால் கடந்த ஆண்டு அவரது வலது காலில் சில விரல்கள் அகற்றப்பட்டது. தைராய்டு பிரச்சினையால் அவரது பேச்சு பாதிக்கப்பட்டது.
முதுகுதண்டு வடத்திலும் பிரச்சினை இருந்துவந்துள்ளது. அத்துடன் தைராய்டும் சேர்ந்ததால் கழுத்தில் இணைந்திருக்கும் தண்டுவடத்தின் நரம்பு பாதிக்கப்பட்டதால் உட்காருவதிலும் அவருக்கு சிரமம் இருந்து வந்துள்ளது.
கடந்த 18-ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பிய விஜயகாந்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சுவாசம் கொடுக்கப்பட்டது. எனினும் நுரையீரல் அலர்ஜியால் இன்று காலை உயிரிழந்தார்.