In Search of Gold, We Lost a Diamond. – மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நினைவுகூரும் ஒரு சம்பவம்.!

தங்கத்தை தேடும்போது வைரத்தை தவற விட்டுவிட்டோம் என்ற கூற்று, சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வந்தது. ஆம் இது கருப்பு வைரம், விஜயகாந்தை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அளவுக்கு நேர்மை பெற்ற ஒரு தலைவனை இன்று இந்த உலகம் இழந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை..

இவரது நேர்மைக்கு உதாரணமாக ஒரு சிறு சம்பவத்தை நாம் தற்போது நினைவு கூர்வோம்…கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் அதிமுக கட்சியுடன் தேமுதிக கட்சியும் கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் 203 இடங்களை கைப்பற்றிய இந்த கூட்டணி அபார வெற்றி பெற்றது.

பல ஆண்டுகளாக எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்று இரண்டு நாற்காலியில் மட்டுமே அமர்ந்த திமுக, 3-ஆம் இடத்திற்கு நகர்ந்து, கேப்டன் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக பதவி பெற்றார். கூட்டணி கட்சி தலைவரே எதிர்கட்சி தலைவராக மாறிவிட்டதால், ஆளுங்கட்சி நினைத்ததை எந்த எதிர்ப்பும் இல்லாமல் செய்துவிடும் என்று பலரும் கூறி வந்தனர்.

ஜனநாயக நடைமுறை இல்லாமல் போய்விடும் என்று கருதினர். ஆனால், எந்த சமரசமும் கொள்ளாத கேப்டன் விஜயகாந்த், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கேள்வி கனைகளால் அசர வைத்தார். ஜெயலலிதா என்ன மிகப்பெரிய ஆளுமையின் முன்னால் பலரும் பம்மிக் கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலுடனும், நேர்மையுடனும், தன் பதவிக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக அவர் பணியாற்றினார்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அவர் பணியாற்றி இருந்தால், இன்னும் சிறப்பான இடத்தை பெற்றிருப்பார். ஆனால், நேர்மையின் பக்கமே எப்போதும் இருந்தார்.. இதனால் தான் in search of gold, we lost a diamond என்ற கூற்று கேப்டனுக்காக கூறப்படுகிறது.. இன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமான அவரை நினைத்து, கடலும், மழையும், மலையும், அவரால் பயன் அடைந்த பெரும் மனிதக் கூட்டமும் கண்ணீர் வடிக்கிறது..

RELATED ARTICLES

Recent News