இந்தியாவில் கரோனா தொற்று ஒரே நாளில் புதிதாக 702 ஆக இந்தியாவில் பதிவாகியுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4,097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.28) தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் இருவரும் கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் புது டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.