தமிழ் திரையுலகிலேயே அதிக அளவில் காவல் அதிகாரியாக நடித்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். 1991ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ இவரது 100வது திரைப்படம்.
மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு தான் மக்கள் அவரை ‘கேப்டன்’ என்று அழைக்கத் தொடங்கினர். சினிமாவைத்தாண்டி மக்கள் பணியிலும் ஆர்வம் காட்டிய விஜயகாந்த் தனது அரசியல்
வாழ்க்கையிலும் வெற்றி கண்டார்.
ஒரு கட்டத்தில் நடிகரை ஏன் கேப்டன் என்று அழைக்க வேண்டும்? என அரசியல் தலைவர்கள் பொங்கி எழுந்தனர். ஆனால் மக்கள் கொடுத்த பேராதரவால் இவையனைத்தும் காற்றில் கலந்து கேப்டனாக வலம் வந்தார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தலைசிறந்த தலைவனை, ஒரு கேப்டனை இன்று இந்த தமிழகம் இழந்துள்ளது. மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளது.