நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் வியாழக்கிழமை (டிச.28) காலை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவு பொதுமக்கள், திரையுலகம், அரசியலில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடல் தீவு திடலுக்கு கொண்டுவரப்பட்டது. மதியம் 1 மணி வரை பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன் , ராதாரவி, வாகை சந்திரசேகர், குஷ்பு, பாக்யராஜ், விலிங்ஸ்டன், ஸ்ரீகாந்த், அருள்நிதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.