தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், நேற்று முன்தினம் காலமானார். இவரது இறப்பு செய்தியை அறிந்த பல்வேறு நடிகர்கள், நேரில் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.
குறிப்பாக, முன்னணி நடிகரான விஜய், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நேரில் வரமுடியாத சில நடிகர்கள், சமூக வலைதளங்களில், அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தங்களது இரங்கல்களை கூறி வந்தனர்.
ஆனால், நடிகர் அஜித், இப்போது வரை, ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் இருப்பது, விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.