குழந்தை பிறந்தவுடன் 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்கும். ஆனால், சிலி நாட்டில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று 7.1 கிலோ எடையில் பிறந்துள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே 6.7 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் சாதனையை தற்போது பிறந்துள்ள குழந்தை முறியடித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குழந்தையை வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது சீரான நிலையில் இருக்கிறது. அவரது தாயார் தான் பெற்றெடுத்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.